கோமாளி – ரஜினிகாந்த் பற்றிய காட்சி நீக்கப்படுவதாக அறிவிப்பு

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு மற்றும் பலர் நடிக்க வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ள படம் ‘கோமாளி’.

அந்தப் படத்தின் டிரைலரில் ரஜினிகாந்த் அரசியல் நுழைவு பற்றிய காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என்று மட்டுமே சொல்லி வருவதாக அந்தக் காட்சி மறைமுகமாகத் தெரிவிக்கிறது.

அதற்கு கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களிலும் கடும் கண்டனம் எழுந்தது.

அதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் விடுத்துள்ள வீடியோவில் அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்கி, ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் வேறு ஒரு காட்சியை சேர்க்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

வீடியோ பார்க்க…

https://www.facebook.com/4TamilCinema/videos/402792960583254/

Read Previous

மெரினா புரட்சி, உனக்கேன் வேண்டாத வேலை என்றார்கள்….

Read Next

பிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்