நெகிழ வைக்கும் சிவகார்த்திகேயன்…

வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உயர்ந்தவர்களுக்குத்தான் அடுத்தவர்களின் கஷ்டமும் புரியும்.

கல்லூரியில் படிக்கும் போது மிமிக்ரி கலைஞராக தன் திறமையை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக உயர்ந்து நிற்கிறார்.

அதே சமயம், அவர் குணத்திலும் உயர்ந்தவர் என்பதை சமீபத்தில் அவர் செய்த ஒரு உதவியும், மறைந்த அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்துவதிலும் இருந்து தெரிய வந்துள்ளது.

மற்ற எந்த இளம் நடிகரும் அப்துல் கலாமுக்கு நேரிடையாகச் சென்று அஞ்சலி செலுத்தாத நிலையில், சிவகார்த்திகேயன் இராமேஸ்வரத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதோடு, திரும்பும் வழியில் மதுரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாட்டுப் புறப் பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மாவைச் சந்தித்து அவருக்கு மருத்துவ உதவிகளைச் செய்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே பரவை முனியம்மாவின் உடல் நிலை குறித்து அவருக்கு வந்த தகவல்களை அடுத்து வெளியில் யாருக்கும் சொல்லாமல் உதவிகளைச் செய்து வந்திருக்கிறார்.

தற்போது, மருத்துவமனையில் அவர் பரவை முனியம்மாவைச் சந்தித்ததை யாரோ ஒரு ரசிகர் புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிறகே அந்தத் தகவலும் வெளியில் தெரிந்துள்ளது.

இத்தனைக்கும் சிவகார்த்திகேயனுக்கு, பரவை முனியம்மாவுடன் ‘மான் கராத்தே’ படத்தில் ஒரே ஒரு பாடலில் நடித்த மட்டும் பழக்கமே இருக்கிறது. அதற்கே அவர் உதவி செய்துள்ளது உண்மையில் நெகிழ்வான ஒரு விஷயம்தான்.

அடுத்தவருக்கு உதவி செய்யும் குணம்தான் சிவகார்த்திகேயனை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது…

அப்துல கலாமுக்கு நேரிடையாகச் சென்று அஞ்சலி செலுத்தியதற்கும், பரவை முனியம்மாவுக்கு தக்க சமயத்தில் உதவி செய்ததற்காகவும் சிவகார்த்திகேயனுக்கு மனம் நிறைவாக, சக மனிதனாக ஒரு சல்யூட்…

Read Previous

Dhanush’s gesture to Paravai Muniamma

Read Next

VSOP…When two girls enters…?

Most Popular