தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முந்திரிக் காடு’. மு.களஞ்சியம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன் புகழ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சுப பிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் தலைவரும், திரைப்பட இயக்குனருமான சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
“முந்திரிக் காட்டு மக்களின் வாழ்க்கை யதார்த்தத்தை இந்தப் படத்தில் பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும், ஏழ்மையின் வியர்வைத் துளி எப்படிப்பட்டது என்பதைச் சொல்கிறோம்.
அங்கே காதல் வயப்பட்ட இருவரின் காதலுக்கு ஊரே எதிர்ப்பு தெரிவிக்க, காக்கி சட்டைக்கு உரிய கௌரவத்தைக் காப்பாற்றும் அன்பரசன் அந்த காதலர்களை சேர்த்து வைக்க எடுத்த முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதும் தான் இப்படத்தின் கதை.
தஞ்சை மாவட்டம், நெல்லை மாவட்டம், ஆந்திராவின் நகரி மற்றும் சென்னை போன்ற இடங்களில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அடுத்து கடலூர், பாண்டி உட்பட பல இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது,” என்கிறார் இயக்குனர் மு.களஞ்சியம்.