பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் தற்போது ‘கோ 2, கவலை வேண்டாம்’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது.
இதில் ‘கோ 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. ‘கவலை வேண்டாம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக நடிக்க காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க உள்ளார். இருவரும் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் இது.
முதலில் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கீர்த்தி சுரேஷ். ஆனால், இப்படத்திற்கான ஃபோட்டோ ஷுட்டில் மட்டும் கலந்து கொண்டவர் அதன் பின் படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட் தராமல் குளறுபடி செய்திருக்கிறார். அதனால், அவரை நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
‘கவலை வேண்டாம்’ படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கி டீகே இயக்குகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.