செப்டம்பர் 16 முதல் ‘தூங்காவனம்’ டிரைலர்…

கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலரது நடிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தூங்காவனம்’ .

மிகவும் குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகி படமாக்கப்பட்ட இந்தப் படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது. ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தீபாவளிக்குத் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் டிரைலரை இம்மாதம் 16ம் தேதி வெளியிட உள்ளார்கள்.

‘பாபநாசம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவர உள்ள இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

புகார் அல்ல கடிதம் – சிம்பு விளக்கம்

Read Next

Savale Samali – Review