புகார் அல்ல கடிதம் – சிம்பு விளக்கம்

‘இது நம்ம ஆளு’ படத்தின் இரண்டு பாடல்களைப் படமாக்க வேண்டி இருப்பதால் நயன்தாரா கால்ஷீட் தர வேண்டும் என அவர் மீது டி.ஆர் புகார் தெரிவித்துள்ளதாக சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது.

ஆனால், நயன்தாரா மீது எந்தப் புகாரையும் அளிக்கவில்லை, தயாரிப்பாளர் சங்கத்திடம் கடிதம்தான் கொடுத்துள்ளோம் என சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.

“இது நம்ம ஆளு’ படத்திற்காக இரண்டு பாடல்களை இன்னும் படமாக்க வேண்டியுள்ளது. நயன்தாராவை படத்தில் நடிக்க வைப்பதற்காக யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனத் தெரியவில்லை.

அதனால், நயன்தாராவின் கால்ஷீட்டை வாங்கித் தாருங்கள். அவருக்குத் தர வேண்டிய சம்பளப் பணத்தையும் உங்களிடமே தந்து விடுகிறோம் என தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் கேட்டோம். அதற்கு அவர்கள் அதையே ஒரு கடிதமாக எழுதித் தாருங்கள் என்றார்கள். அதற்காக கடிதம்தான் கொடுத்திருக்கிறோமே தவிர, நயன்தாரா மீது எந்தப் புகாரையும் அளிக்கவில்லை.

இப்படித்தான் ‘வாலு’ படத்திற்கும் ஒரு பாடல் எடுப்பதற்காக ஹன்சிகாவிடம் கேட்டோம். அவர் கால்ஷீட் தந்தார், அதன் பின் அந்தப் பாடலை எடுத்து படத்தில் சேர்த்தோம். நயன்தாராவும் கால்ஷீட் தந்தால் இரண்டு பாடல்களுடன் படம் வெளிவரும். இல்லையென்றால் அந்தப் பாடல்கள் இல்லாமலே படத்தை வெளியிடுவோம்,” என சிம்பு தெரிவித்துள்ளார்.

‘இது நம்ம ஆளு’-ன்னு டைட்டில் வைத்து விட்டு, ‘நம்ம ஆளு’ இப்படி அலைய விடறாங்களே…

Read Previous

Yatchan – Kaaka Ponnu – Song

Read Next

செப்டம்பர் 16 முதல் ‘தூங்காவனம்’ டிரைலர்…

Most Popular