‘சர்கார்’ கதை விவகாரத்தில் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆக இருக்கும் பாக்யராஜ், ‘சர்கார்’ படத்தின் கதையை முழுவதுமாக சொல்லிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இன்று ‘சர்கார்’ கதை விவகாரம் முடிவுக்கு வந்த பின் அது குறித்து பாக்யராஜ் பேசுகையில்,
“பிரச்சினையே கதைதான்னு இருக்கும் போது அதை நான் எப்படி சொல்லாம இருக்க முடியும். இரண்டு கதைக்கும் பொருத்தம் இருக்குதுன்னு சொல்லும் போது, அந்தக் கதையை சொல்லிதானே ஆகணும். சூழ்நிலை அதை மாதிரி இருந்ததால கதையை வெளிய சொல்ல வேண்டியதாகியது,” என்றார்.
பாக்யராஜ் ‘சர்கார்’ கதையை வெளியில் சொல்லியதற்காக அவருடைய மகன் நடிகர் சாந்தனு டிவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
“அப்பா கதையை வெளிப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தவிர்க்க முடியாத சூழல்,” என அவர் கூறியுள்ளார்.
சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” !
என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான் !
Apologies on Story reveal by appa #UnavoidableCircumstance Sincere apologies though 🙏🏻
தீபாவளியை கொண்டாடுவோம்
Sarkar கொண்டாடுவோம் ! 😊 pic.twitter.com/XXU4Nd0h0w— Shanthnu (@imKBRshanthnu) October 30, 2018