வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் ‘எவனும் புத்தனில்லை’.
இந்த படத்தில் நபி நந்தி ,சரத் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக சுவாசிகா, நிகாரிகா நடிக்கிறார்கள். மற்றும் கெளரவ வேடத்தில் பூனம் பஜ்வா, சினேகன் நடிக்கிறார்கள்.
நான் கடவுள் ராஜேந்திரன், சங்கிலிமுருகன், எம்.எஸ் .பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, சிங்கமுத்து, முரு ஆரு, கே.டி.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, பசங்க சிவகுமார், சுப்புராஜ், எம்.கார்த்திகேயன், காதல் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தை கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் S.விஜயசேகரன்
“அண்ணன், தங்கை பாசத்தை உள்ளடக்கிய, ஜனரஞ்சகமான படமாக ‘எவனும் புத்தனில்லை’ படம் உருவாகி உள்ளது.
ஆக்ஷன் திரில்லர் படமாக மலை வாழ் கிராம மக்களின் வாழ்வியலை இதில் சொல்லி இருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர் S.விஜயசேகரன்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது.
படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடை பெற்றது.