சொந்த நிறுவனம் ஆரம்பித்த வெங்கட் பிரபு

சூர்யா, நயன்தாரா நடித்த ‘மாஸ்’ படத்தின் தோல்விக்குப் பிறகு வெங்கட் பிரபு அவரது அடுத்த படம் பற்றிய எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார்.

இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு முக்கிய அறிவிப்பை சற்று முன் வெளியிட்டுள்ளார்.

வெங்கட் பிரபுவின் அடுத்த படம் அவருடைய சொந்தத் தயாரிப்பாகவும் வெளிவர இருக்கிறது. ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ என்ற பெயரில் புதிய பட நிறுவனத்தை வெங்கட் பிரபு ஆரம்பித்திருக்கிறார்.

இந்த நிறுவனமும் கௌதம் மேனன் புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படத்தைத்தான் வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.

விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் நட்சத்திரங்கள் அறிவிப்பு வெளியாக உள்ளது.

Read Previous

ஜெயா டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

Read Next

‘நானும் ரௌடிதான்’ – வசூல் விவரம்…