தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் மற்றும் பலர் நடித்த ‘நானும் ரௌடிதான்’ படம் அக்டோபர் 21ம் தேதியன்று வெளியானது.
கடந்த 15 நாட்களில் இந்தப் படம் உலகம் முழுவதும் சுமார் 34 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 26 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. கர்நாடகா, கேரளா நாட்டின் பிற பகுதிகளில் 1.5 கோடி வசூல் செய்து இந்தியாவில் மட்டும் 27.5 கோடி வசூலித்துள்ளது.
வெளிநாடுகளில் அமெரிக்கா, மலேசியாவில் வில் 1.6 கோடியும் மற்ற நாடுகளையும் சேர்த்து 6.5 கோடி வசூல் செய்துள்ளதாம். ஆக மொத்தம் 34 கோடி ரூபாய் இப்படம் வசூலித்துள்ளது என்கிறார்.
‘நானும் ரௌடிதான்’ படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிப் படம் என்று அறிவிக்கப்பட்டாலும் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்று இதுவரை சொல்லவில்லை.
ஆனால், அவர் நடித்த ‘மாரி’ படத்தின் 25 நாள் வசூல் 60 கோடி என்றும், 10 நாளில் 50 கோடி என்றும், ஒரு வாரத்திற்குள் 30 கோடி வசூல் என்றும், 4 நாளில் 25 கோடி என்றும், மூன்று நாளில் 20 கோடி என்றும், இரண்டு நாளில் 13 கோடி என்றும், முதல் நாளில் 6 கோடி வசூல் என்றும் ரிட்வீட் செய்த தனுஷ் ‘நானும் ரௌடிதான்’ பட வசூல் பற்றி சொல்லாமல் இருப்பதன் காரணம் என்ன…?