வசிஷ்டா, கணேஷ், நிகிஷா பட்டேல், சிம்ரன், இனியா மற்றும் பலர் நடித்துள்ள ‘கரையோரம்’ திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் எல்.ஆனந்த், ராமலிங்கையா , ஸ்டுடியோ 9 சுரேஷ் களஞ்சியம், இயக்குநர் ஜெ.கே.எஸ், நாயகன் கணேஷ் , நிகிஷா படேல், இனியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் படம் பற்றி இயக்குநர் ஜெ.கே.எஸ் கூறியதாவது,
“கரையோரம்’ திரைப்படம் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை உங்களை பயமுறுத்தும் வித்தியாசமான த்ரில்லர் திரைப்படமாக இருக்கும். இந்த படத்தை நாங்கள் மிகப் பெரிய தொழில்நுட்பக் குழுவைக் கொண்டு உருவாக்கியுள்ளோம்.
இந்தப் படத்தில் நடிகை சிம்ரன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்ரனுக்கு மிகப்பெரிய திருப்புமுனை திரைப்படமாக அமையும். அவருக்கு இது ‘கம் பேக்’ படமாக இருக்கும் என்று கூட சொல்லலாம். மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் நாயகி நிகேஷா படேலுக்கு அவருடைய திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமையும்.
கவர்ச்சிக் கன்னியாக வளம் வரும் நிகிஷாவிடமிருந்து மிகச்சிறந்த நடிப்பை இந்த படத்துக்காக வெளிக் கொண்டு வந்துள்ளேன். இனியா அவர்களின் நடிப்பு இந்த படத்தில் நிச்சயம் பேசப்படும். அவர் இந்தப் படத்தில் முற்றிலும் புதுமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் இடைவேளைப் பகுதி நிச்சயம் எல்லோரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதற்குக் காரணம் இதுவரை யாரும் தொடாத ஒரு விஷயத்தை நாங்கள் படத்தில் கையாண்டுள்ளோம்,” என்றார் இயக்குநர்.
விரைவில் படம் திரைக்கு வருகிறது.