மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் விஜயகாந்த்…

விஜயகாந்த் அவருடைய மகன் சண்முக பாண்டியன் அறிமுகமான ‘சகாப்தம்’ படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்த முறை மகன் சண்முக பாண்டியனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அந்தப் ‘படத்திற்கு தமிழன் என்று சொல்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தை தமிழ் ஸ்டுடியோஸ் எண்டெர்டெயின்மென்ட் மீடியா நெட்வொர்க்ஸ் சார்பாக கோவர்தனி வரதராஜன் தயாரிக்கிறார்.

‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் வெற்றிகரமான இசையமைப்பாளராக உயர்வு பெற்ற ஹிப்ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – கொலஞ்சி குமார், சண்டை பயிற்சி- ஸ்டண்ட் சில்வா, எடிட்டிங் – வரதராஜன், கலை -விஜய ஆதிநாதன், நடனம்- பிருந்தா, தினேஷ், ஸ்ரீதர், VFX- மோகன்.

இப்படத்தை புதுமுக இயக்குனர் அருண் பொன்னம்பலம் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை வரும் ஞாயிறு 22ம் தேதி காலை சென்னையில் நடைபெற உள்ளது.

Read Previous

Shruti Haasan in ‘Simply Khushbu’ on Zee Tamil

Read Next

டிசம்பர் 4ம் தேதி சீறிப் பாய வரும் ‘ஈட்டி’

Most Popular