சிம்பு, அனிருத் இருவரும் இணைந்து உருவாக்கிய ‘பீப் சாங்’ குறித்து கோவை காவல் துறை நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு சம்மனை அனுப்பியுள்ளது.
இன்று காலை முதலே பல்வேறு அமைப்புகளும் அந்தக் கேவலமான பாடலுக்கு எதிராக தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்திய மாணவர் கூட்டமைப்பினரும் சிம்புவுக்கு எதிராகத் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்யும் விதத்தில் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து அந்தப் பாடலுக்கு பலத்த எதிர்ப்பு உருவாகி வருவதால் அவரது வீட்டைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.