பாண்டிராஜ், விஷால் முதன் முறையாக இணையும் ‘கதகளி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் ஆதி, நாயகன் விஷால், மற்றும் நடிகர்கள் கருணாஸ், மைம் கோபி, பவன், முனீஸ்காந்த் ஆத்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விஷாலுக்கு ‘பாண்டிய நாடு’ படம் அமைந்ததைப் போல இந்தப் படமும் ஒரு யதார்த்தமான ஆக்ஷன் படமாக அமைந்து அவருடைய வெற்றிப் படங்களின் வரிசையில் அமையக் கூடிய ஒரு படமாக இருக்கம் என இயக்குனர் பாண்டிராஜ் கூறினார்.
“கதகளி படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு அனைவரும் இது உங்கள் படம் போல் இல்லையே என்று என்று கேட்கின்றனர்.
இப்படம் விஷால் அவர்களுக்கு நிச்சயம் புதிய பரிமாணத்தை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்படத்தின் கதை நிஜ சம்பவங்களை கோர்வையாக கொண்டது. இயக்குநர் சுசீந்திரன் அவர்கள் மூலம் விஷால் சாரை நான் சந்தித்து கதை சொல்லினேன். விஷால் சாருக்கு நான் இரண்டு கதைகளை கூறினேன்.
முதலாவதாக நான் கூறிய கதை குடும்பபாங்கான ஆக்க்ஷன் படத்துக்கான கதை. விஷால் சாருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. நான் பின்னர் அவரிடம் நான் இன்னொரு கதை சொல்கிறேன் என்று கூறினேன். அக்கதையை அவரும் கேட்டார். நான் இரண்டாவதாக சொன்ன கதை விஷால் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்த கதை நாவலை போல மிகவும் சுவாரசியமாகவும் அருமையாகவும் உள்ளது நிச்சயம் இந்த கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறினார்.
படத்தில் மொத்தமே இரண்டே பாடல்கள் மட்டுமே உள்ளன. முதலில் நாங்கள் படத்துக்காக குத்து பாடல் ஒன்றை சேர்த்திருந்தோம். படத்தை பார்த்த பிறகு , படத்தின் இரண்டாம் பாதியில் பாடல்களே தேவை இல்லை.என்ற முடிவுக்கு வந்து விட்டோம். படம் சிறப்பாக வந்துள்ளது என்று விஷால் அவர்களே கூறினார்.
நாங்கள் படத்தில் இடம் பெற வேண்டாம் என்று நினைத்த வசனங்களை கூட விஷால் சார், மக்கள் நிச்சயமாக இதை ரசிப்பார்கள் என்று கூறி படத்தில் அதை இடம் பெற வைத்தார். படத்தில் நாயகி கேத்ரீன் தெரேசா மீனு குட்டி என்னும் அழகான கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
நான் அமைதியான ஒரு ஆள் என்றுதான் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மென்மையான படங்களைத்தான் எடுப்பேன் என்ற ஒரு பார்வையும் இருக்கிறது. ‘கதகளி’ அந்தப் பெயரை மாற்றும், அந்த அளவிற்கு இந்தப் படம் ஒரு யதார்த்தமான ஆக்ஷன் படமாக அமையும்,” என்றார் இயக்குனர் பாண்டிராஜ்.