ரஜினி, கமல், விஜய்யை பின்னுக்குத் தள்ளி அஜித் முதலிடம்

சென்னையில் உள்ள லயோலா கல்லூரி தேர்தல்கள் நடைபெறும் சமயத்தில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்துவது வழக்கம்.

அந்தக் கருத்துக் கணிப்புகள் எந்தத் தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது, எந்த அளவிற்கு உண்மையானது, நேர்மையானது என்பது ஒரு புறம் இருந்தாலும் அனைத்து ஊடகங்களும் அந்தக் கருத்துக் கணிப்பு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

விரைவில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தல் குறித்த அவர்களது கருத்துக் கணிப்புகளை இன்று வெளியிட்டனர். அவற்றோடு தமிழ்நாட்டில் எந்த நடிகருக்கு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருக்கிறது என்பது குறித்தும் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள்.

அதன்படி 16 சதவீத ஆதரவு பெற்று அஜித் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.15.9 சதவீதம் பெற்று ரஜினிகாந்த் இரண்டாம் இடத்திலும், 9.2 சதவீதம் பெற்று விஜய் மூன்றாமிடத்திலும், 5.9 சதவீதம் பெற்று கமல்ஹாசன் நான்காவது இடத்திலும், 4.3 சதவீத ஆதரவு பெற்று சூர்யா ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Read Previous

கமல்ஹாசன் வெளியிட்ட ‘ஓய்’ இசை வெளியீடு

Read Next

அருள்நிதியின் ஆக்ஷன் நடிப்பில் ‘ஆறாது சினம்’