அருள்நிதியின் ஆக்ஷன் நடிப்பில் ‘ஆறாது சினம்’

பல வெற்றிப் படங்களைத் தயாரித்தும், வினியோகம் செய்து வரும் இராம.நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘ஆறாது சினம்’.

கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் எழுதிய கதைக்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிவழகன்.

‘ஈரம், வல்லினம்’ படங்களுக்குப் பிறகு அறிவழகன் இயக்கியுள்ள படம் இது. அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

ராதாரவி, துளசி, ரோபோ சங்கர், ஐஸ்வர்யா தத்தா, சாரிலி, ஆர்.என்.ஆர்.மனோகர், அனுபமா குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நகரில் தொடர்ந்து கொலைகள் நடைபெறுகிறது. அந்தக் கொலைகளை செய்வதர்களைக் கண்டுபிடிக்க அரசாங்கம் ஒரு காவல் துறை அதிகாரியை நியமிக்கிறது. கொலைகாரர்கள் அந்தக் காவல்துறை அதிகாரிக்கம் அவரது குடும்பத்தினருக்கும் தொல்லைகள் கொடுக்கின்றனர். அவைகளை மீறி காவல் துறை அதிகாரி கொலைகாரர்களை கைது செய்தாரா ?, அவரது குடும்பம் என்னவானது ?, யார் வென்றது ?, என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான விடைதான் ‘ஆறாது சினம்’.

“காவல் துறை அதிகாரியாக அதிரடியான ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அருள்நிதி. அவரும், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்ததால் குறிப்பிட்ட நாட்களில் படத்தை முடித்துள்ளேன். திருவள்ளுவரின் ‘அதிகாரம்’ பகுதியிலிருந்து திருக்குறள்ளை எடுத்து அருமையான பாடலாக இசையமைத்துத் தந்துள்ளார் இசையமைப்பாளர் தமன்,” என்கிறார் அறிவழகன்.

மதுரை, செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, சென்னை பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விவேகா எழுதிய பாடல் ஒன்றை விஜய் யேசுதாஸ் பிரமாதமாகப் பாடியுள்ளார்.

படத்திற்கு ஒளிப்பதிவு – அரவிந்த் சிங், படத் தொகுப்பு – ராஜேஷ் கண்ணா, சண்டைப் பயிற்சி – திலீப் சுப்பராயன், கலை – சக்தி வெங்கட்ராஜ், தயாரிப்பு நிர்வாகம் – ஜெ.துரை, செல்வம்.

இராம. நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.ராமசாமி மிகுந்த பொருட் செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

Read Previous

ரஜினி, கமல், விஜய்யை பின்னுக்குத் தள்ளி அஜித் முதலிடம்

Read Next

Pandigai – Official Teaser