மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடட் தயாரிப்பில் ஃப்ரான்சிஸ் மார்கஸ் இயக்கத்தில் இளையராஜாவின் இன்னிசையில், கீதன் பிரிட்டோ, ஈஷா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ‘ஓய்’.
மிகவும் எளிமையாக நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இப்படத்தின் இசையை, கமல்ஹாசன் வெளியிட இளையராஜா பெற்றுக்கொண்டார்.
“தன் வசீகர இசையால் பல இளம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் கனவுப் படங்களுக்கு வெற்றியை அடித்தளமாக அமைத்தவர் இளையராஜா. ‘16 வயதினிலே’ உள்ளிட்ட பல படங்கள் அதற்கு சான்று. இன்று ஃப்ரான்சிஸ் மார்கஸ் இயக்கும் ‘ஓய்’ படத்திற்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படமும் வெற்றி பெற்று சாதனை படைக்க எனது வாழ்த்துக்கள்,” என கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்தார்.