ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வடிவுடையான் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சவுகார் பேட்டை’.
இப்படம் இந்த மாதம் 26ம் தேதி வெளியாகிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனம் உலகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது.
படம் பற்றி இயக்குனர் கூறுகையில்,
“ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி இருவரது சினிமா வாழ்கையில் மிகப் பெரிய திருப்புமுனைப் படமாக இந்தப் படம் இருக்கும். சுமன் இந்த படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படு வேகமான திரைக்கதையும், படு பயங்கரமான காட்சிகளும் அனைவரையும் ரசிக்க வைக்கும்.
‘சவுகார் பேட்டை’ படம் சிறப்பாக வந்துள்ளதால் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் எனக்கு ‘பொட்டு’ படம் இயக்கும் வாய்பையும் கொடுத்துள்ளார்.
‘பொட்டு’ படத்தைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் நடிக்கும் மற்றுமொரு படத்தை நான் இயக்குகிறேன். அந்த படத்தையும் ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். அதுவும் பேய் படமா இல்லையா என்பதை விரைவில் அறிவிப்போம். இதே நிறுவனத்தில் நான் இயக்கும் மூன்றாவது படம் அது,” என சந்தோஷத்துடன் சொல்கிறார் வடிவுடையான்.