ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.ரவிகுமார் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படம் ‘நட்பதிகாரம் – 79’ .
‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் நடித்த ராஜ் பரத் ஒரு நாயகனாகவும், ‘வல்லினம்’ படத்தில் நடித்த அம்ஜத் மற்றொரு நாயகனாகவும் நடித்துள்ளார்கள்.
கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள். மற்றும் M.S.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். ‘கலக்கப் போவது யாரு’ விக்னேஷ் கார்த்திக் காமெடியனாக அறிமுகம் ஆகிறார்.
இப்படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
படம் பற்றி இயக்குனர் ரவிச்சந்திரன் கூறியதாவது,
“கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்த வேளை, உற்சாகம்” படங்களைத் தொடர்ந்து நான் இயக்கும் ஐந்தாவது படம் ‘நட்பதிகாரம் – 79’.
‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்தில் நட்பையும் காதலையும் சொன்ன விதத்தில் அப்படம் பெரிய வெற்றி அடைந்தது. அதே போல் இப் படத்தில் நட்பு, காதல், குடும்ப உறவுகள் பற்றியும் வேறு ஒரு பரிமாணத்தில் சொல்லி இருக்கிறேன்,” என்கிறார் இயக்குனர் ரவிச்சந்திரன்.
மார்ச் மாதம் 11ம் தேதி உலகம் முழுவதும் ‘நட்பதிகாரம் 79’ வெளியாகிறது.