“பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும், நிலவே முகம் காட்டு, மிட்டாமிராசு, கருங்காலி” போன்ற படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம்.
‘கருங்காலி’ படத்தில் நடிகை அஞ்சலியோடு இணைந்து எதிர் கதாநாயகனாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தன.
இயக்குனர் ஷங்கர், கே.வி.ஆனந்த் ஆகியோரிடம் உதவியாளராகப் பணி புரிந்த கிருஷ்ணகுமாரின் ‘களவு தொழிற்சாலை’ படத்தில் உளவுத் துறை அதிகாரியாக நடித்தார். அடுத்து கதிரவன் இயக்கிய ‘கோடை மழை’ படத்தில் காவல்துறை ஆய்வாளராக நடித்துள்ளார்.
‘கோடை மழை’ படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட ‘கோடை மழை’ படத்தில் மு.களஞ்சியம் வெள்ளத்துரை என்கிற கதாபாத்திரத்தில், நடிகை பிரியாங்காவின் அண்ணனாக நடித்தார்.
களஞ்சியத்தின் கம்பீரமான தோற்றமும், முறைப்பான நடை, உடை, பாவனையும் வெள்ளத்துரை கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது.
படம் பார்த்த அனைவரும் மு. களஞ்சியத்தின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார்கள்.
‘கோடை மழை’ படத்தைப் பார்த்த நடிகர் விஜய் சேதுபதி “தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகச் சிறந்த நடிகன் கிடைத்துள்ளார், இயக்குனர் மு,களஞ்சியத்திற்கு போலீஸ் கெட்-அப் சரியாகப் பொருந்தி இருக்கிறது, திருநெல்வேலி மாவட்டத்துக்காரனாவே மாறி வாழ்ந்திருக்கிறார்’’ என்று மனம் விட்டுப் பாராட்டியுள்ளார்.
‘கோடை மழை’ திரைப்படத்தைத் தொடர்ந்து மு.களஞ்சியம் புதுமுகங்கள் நடிக்கும் ‘முந்திரிக் காடு’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கி வருகிறார்.
தொடர்ந்து தனக்குப் பொருத்தமான குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடிக்க முடிவெடுத்துள்ளார்.