தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் நஸ்ரியாவை மறந்து விட்டிருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.
தமிழில் நடித்தது ஐந்தே ஐந்து படங்கள்தான், அதிலும் நான்கு தோல்விப் படங்களாக இருந்தாலும், ‘ராஜா ராணி’ என்ற ஒரு படத்திலேயே ரசிகர்களின் மனதில் அமர்ந்துவிட்டார்.
மலையாளத்தின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஃபகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சீக்கிரமே சினிமாவுக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டார்.
மலையாளத்திலிருந்து நடிகைகள் வந்தாலும் ரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்கும் தமிழ் சினிமா. ஆனால், மலையாள நடிகர்கள் வந்தால் மட்டும் அதிகம் கண்டு கொள்ள மாட்டார்கள்.
இருந்தாலும் மம்முட்டி, மோகன்லால் எப்போதாவது தமிழில் நடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது நஸ்ரியாவின் கணவர் ஃபகத் பாசில் இணைந்திருக்கிறார். ‘தனி ஒருவன்’ மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் படத்தில் ஃபகத் பாசில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று முன் வெளியிட்டுள்ளார்கள்.