பாண்டியராஜன் வில்லத்தனத்தில் ‘சாலையோரம்’

ஸ்மைலி பிக்சர் தயாரிப்பில் கே.மூர்த்தி கண்ணன் இயக்கத்தில் ராஜ், ஷெரினா ஆகிய புதுமுகங்களுடன் பாண்டியராஜன் வில்லத்தனத்துடனும், சிங்கம்புலி, முத்துக்காளை, மிப்புசாமி ஆகியோரின் காமெடி கலாட்டாகளுடனும் தயாராகியுள்ள படம் ‘சாலையோரம்’.

ஏப்ரல் 29 திரைக்கு வர இருக்கும் இந்தப் படம் தணிக்கைக்குழுவின் பெரும் பாராட்டைப் பெற்று ‘U’ சான்றிதழுடன் தமிழக அரசின் வரி சலுகையையும் பெற்றுள்ளது,

இப்படத்தின் இயக்குனர் மூர்த்தி கண்ணன் இயக்குனர் P.வாசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பின்னனி இசை – மரியா மனோகர், இசை – சேதுராம், ஒளிப்பதிவு – தினேஷ் நிவாஸ், எடிட்டிங் – செல்வராஜா.

கழிவுத் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி இறக்கும் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்க்கையையும், சமூகத்தால் அலட்சியப்படுத்தப்படும் அவர்களின் உயிர்களையும் மையமாகக் கொண்ட திரைப்படம் இது.

Read Previous

ஒரு தலைக் காதலில் ‘கொள்ளிடம்’

Read Next

Chembarambakkam – A boom integral estate investment destination

Most Popular