வீடியோ அனுப்பினால் தங்கக் காசு பரிசு, கிரிஷ்ணம் படக்குழு அறிவிப்பு

கேரளாவில் குருவாயூரப்பன் அருளால் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மையான அற்புத நிகழ்வை அடிப்படையாக வைத்து ‘கிரிஷ்ணம் ‘படம் உருவாகியுள்ளது.

அந்த உண்மையான சம்பவம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வாழ்க்கயில்தான நடந்துள்ளது.

தனக்கு நேர்ந்த அனுபவத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில், தானே தயாரிப்பாளராகி பி என்.பலராம் என்பவர் இப்படத்தை எடுத்துள்ளார். ‘கிரிஷ்ணம் ‘ என்கிற இப் படம் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வைக் கொண்டு உருவாகியுள்ளது.

அதே போல தங்கள் வாழ்வில் நிகழ்ந்த, பிறரால் நம்ப முடியாத ஆனால் உண்மையிலேயே நடந்த அற்புதமான அனுபவங்களை அனுப்புவோருக்குத் தங்கக் காசுகள் வழங்க ‘கிரிஷ்ணம்’ தயாரிப்பாளர் முன் வந்துள்ளார்.

அப்படிப்பட்ட அனுபவங்களைச் சந்தித்தவர்கள் அதை வீடியோ பதிவாக்கி பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம், லைக், ஷேர் சாட், டிக் டாக், மூலம் அனுப்பி வைத்தால் ஐந்து நாளைக்கு ஒருமுறை தங்கக் காசு வழங்கவுள்ளதாக ‘கிரிஷ்ணம்’ படத்தின் தயாரிப்பாளர் பி.என் பலராம் அறிவித்துள்ளார். இப்பரிசு மழை ‘கிரிஷ்ணம் ‘படம் வெளியாகும் வரை தொடரும்.

இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். அக்ஷய் கிருஷ்ணன், நாயகனாக நடிக்க, நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார்.

பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Read Previous

Sarvam Thaala Mayam – Tamil Trailer

Read Next

சார்லி சாப்ளின் 2 – சின்ன மச்சான்…. பாடல் வீடியோ…

Most Popular