தினேஷை சுற்றி வளைத்த கமாண்டோ வீரர்கள்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க அவருடைய உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கி வரும் படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’.

தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான் விஜய், ஜானி ஹரி, வினோத் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை சண்டைப் பயிற்சியாளர் சாம், மற்றும் இயக்குனர் அதியன் ஆதிரை சென்னை புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் எடுத்து வருகின்றனர்.

நாயகன் தினேஷ் வேகமாக செல்லும் லாரியில் தொங்கிக் கொண்டு சண்டைபோடும் காட்சிகளை படமாக்கினர். கேமரா லாரிக்குள் இருந்ததால் ரோட்டில் செல்வோருக்கு நிஜமாக ஏதோ லாரியில் நடக்கிறது என்பது போன்ற தோற்றத்தை கொடுத்திருக்கிறது. அந்த நேரத்தில் அந்த வழியே வந்த ஸ்பெஷல் கமாண்டோ படை வீரர்கள் நிஜமாகவே லாரியில் இரவு நேரத்தில் ஏதோ நடக்கிறது என்று லாரியை சுத்தி வளைத்துப் பிடித்தனர்.

இதை அறிந்திராத நாயகன் தினேஷ், ‘நமக்குத்தெரியாமல் இது என்ன புதுசா கமாண்டோ வீரர்கள் எல்லாம் சீன்ல வராங்களே இது சீன்லயே இல்லியே,’ என்று அதிர்ச்சியடையாமல் சுற்றி வளைத்த போலீசார் வைத்திருந்த துப்பாக்கிகளை பார்த்து இது என்ன ஒரிஜினல் மாதிரியே இருக்கு ? என்று கேட்க, நிஜ போலீசார் துப்பாக்கியை தினேஷ் மீது குறிவைக்க, இயக்குனர் சூட்டிங், சூட்டிங், என்று சத்தம்போட அதற்குப் பிறகே தினேஷ் அதிர்சிய அடைந்திருக்கிறார். நெருங்கி வந்த வீரர்கள் தினேஷ் முகத்தை கவனித்த பிறகே நிஜமான சூட்டிங் என்று உறுதிபடுத்தியுள்ளனர்.

இதனால் சாலையில் லேசாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிளம்பும் போது படப்பிடிப்பு நிஜமாக இருக்கிறது வாழ்த்துக்கள் தினேஷ் என்று பாராட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள் கமாண்டோ படை வீரர்கள்.

Read Previous

தேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…

Read Next

ரஜினி வீட்டுக் கல்யாணத்தில் அம்பானி குடும்பம்

Most Popular