‘யாக்கை’ – காதலை கசக்கிப் பிழியும் விக்னேஷ் சிவன்

காதலில் விழுந்தவர்களை கவிதை வந்து ஆட்டிப் படைக்கும். தமிழில் சரி வர எழுதப் படிக்கத் தெரியாதவன் கூட காதலில் விழுந்து விட்டால் கவிதையாக எழுத ஆரம்பித்து விடுவான்.

காதலுக்கு அப்படி ஒரு சக்தி உண்டு.

சாதாரண பெண்ணிடம் காதல் வலையில் விழுந்தவனுக்கே அப்படியென்றால் பேரழகியைக் காதலியாகக் கொண்டவர்களுக்கு காதல் என்பது எப்படி இருக்கும்.

“உனக்கு வெய்ட் பண்ணி, என் பாடி வீக் ஆகுது, பேஸ்மென்ட் ஷேக் ஆகுது, ஹார்டு பிரேக் ஆகுது” என்று எழுத மாட்டார்களா என்ன…

காதலில் காத்திருத்தலும் ஒரு சுகம்தான், ஆனாலும் எவ்வளவு நாட்களுக்குத்தான் காத்திருப்பது…அப்புறம் காத்திருத்தலே வலியாகிவிடுமே…

அப்படி ஒரு காதல் வலியை ‘யாக்கை’ படத்திற்காக வடித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் தனுஷ் இந்தப் பாடலைப் பாடினால் எப்படியிருக்கும்…

இன்னும் இரண்டு நாள்தான்…‘சொல்லித் தொலையேன்மா…’ என்ற மற்றுமொரு சிங்கிளை ‘யாக்கை’ குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.

Read Previous

Dhilluku Dhuddu, advance bookings is brisk

Read Next

Mudinja Ivana Pudi – Essaalaama Title Track Teaser

Most Popular