மகேஷ் பாபு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்க தமிழ், தெலுங்கில் பிரம்மாண்டமாகத் தயாராக உள்ளது.

இந்தப் படத்தில் பரீணிதி சோப்ரா முதலில் நாயகியாக நடிக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது ரகுல் ப்ரீத் சிங்-கை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் உள்ளார். தமிழில் தற்போது விஷாலுடன் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடிக்க உள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ்பாபு முதல் முறையாக இணைய உள்ள இந்தப் படம் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ளது. மகேஷ் பாபு தமிழில் நேரடியாக நடிக்கும் முதல் படமும் இதுதான்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதமே ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

Read Previous

Annakodiyum 5 Pengalum on 350th episode

Read Next

Ulkuthu – Teaser

Most Popular