ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரபல ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது.
அங்கு சில தினங்களுக்கு முன்பு காதை அதிர வைக்கும் சத்தத்துடன் ஒரு காட்சியை ஷங்கர் படம் பிடித்தாக அந்தப் பகுதியில் உள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
ஒரு காரை வெடிக்க வைக்கும் காட்சி அங்கு படமாக்கப்பட்டதாகவும், அதனால்தான் அப்படி ஒரு பெரும் சத்தம் எழுந்ததாகவும் தெரிவிக்கிறார்கள். அந்த சத்தத்தையும், காற்று ஒலியில் ஏற்பட்ட அதிர்வையும் படக் குழுவினரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் சொல்கிறார்கள்.
மக்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து படமெடுக்கும் ஷங்கர் இந்த விஷயத்தில் கவனிக்காமல் விட்டது ஏனோ…?.