தமிழ்த் திரையுலகில் அடுத்த வசூல் நாயகனாக உயர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன்.
அக்டோபர் 7ம் தேதியன்று அவர் நடித்து வெளியான ‘ரெமோ’ திரைப்படம் முதல் நாளிலேயே நல்ல ஓபனிங்குடன் தன்னுடைய வசூலை ஆரம்பித்தது.
அந்த வசூல் இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என அதிகரித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதாலும் பெரும்பாலான தியேட்டர்களில் முன்பதிவு முடிந்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை வந்த வசூல் திரைப்படங்களில் ‘கபாலி, தெறி’ ஆகிய இரண்டு படங்களுக்குப் பிறகு தற்போதைக்கு ‘ரெமோ’ படம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘ரெமோ’ படத்தைத் தயாரித்துள்ள 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம், “இரண்டாம் நாள் வசூல் முதல் நாள் வசூலையும், மூன்றாம் நாள் வசூல் முதல் இரண்டு நாட்கள் வசூலையும், நான்காவது நாள் வசூல் முதல் மூன்று நாள் வசூலை முறிடியத்துள்ளதாக வினியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்,” என அறிவித்துள்ளது.
படத்தைத் தயாரித்துள்ள ஆர்.டி. ராஜா, “வினியோகஸ்தர்களும், தியேட்டர் ஓனர்களும் என்னிடம் பேசினார்கள். எல்லா இடங்களிலும் 100 சதவீதம் தியேட்டர்கள் நிரம்பியுள்ளது என்றார்கள். அனைவருக்கும் படம் லாபத்தைத் தந்து அதற்கு மேலும் வசூலைக் கொடுக்கும், மிக்க மகிழ்ச்சி,” எனத் தெரிவித்துள்ளார்.