விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ?

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் மற்றும் பலர் நடிக்க 2005ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற படம் ‘சண்டக்கோழி’.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கப் போவதாக கடந்த வருடத்திலிருந்தே சொல்லி வந்தார்கள். அதற்குள் லிங்குசாமிக்கும், விஷாலுக்கும் பிரச்சனை வர படம் கைவிடப்படுவதாக விஷாலே அறிவித்தார்.

அதன்பின் நடந்த சமாதானப் பேச்சு வார்த்தையில் சுமூகமானார்கள். மீண்டும் ‘சண்டக்கோழி 2’ உருவாகும் என தகவல் வெளியானது.

அந்தப் படம் ஆரம்பமாவதற்குள் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு விழாவும் நடந்து முடிந்துவிட்டது.

‘சண்டக்கோழி 2’ படத்தை முடித்த பிறகுதான் அல்லு அர்ஜுன் படத்தை இயக்கப் போகிறார் லிங்குசாமி. ‘சண்டக்கோழி 2’ படத்திற்காக விஷால் ஜோடியாக நடிக்கும் நாயகி தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போதைய முன்னணி நாயகியான கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அவரிடம் ‘சண்டக்கோழி 2’ படத்திற்கு மட்டும் நாயகி அல்ல, அல்லு அர்ஜுன் படத்திற்கும் அவர்தான் நாயகி என்ற ரீதியில் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

எனவே, கீர்த்தி சுரேஷ் இதற்கு சம்மதித்துவிடுவார் என்கிறார்கள்.

Read Previous

ஹோட்டல் கட்டப் போகிறார் த்ரிஷா ?

Read Next

5 மாநிலங்களில் ‘கொடி, காஷ்மோரா’ மோதல்…

Most Popular