தமிழ் மற்றும் தெலுங்கில் சில வருடங்கள் வரை நம்பர் 1 இடத்தில் இருந்தவர் த்ரிஷா.
பல புதுமுக நடிகைகளின் வரவு காரணமாக அவரால் அதிகப் படங்களில் நடிக்க முடியவில்லை. இருந்தாலும் இப்போதும் அவரைத் தேடி கதாநாயகி வாய்ப்புகள் வந்து கொண்டுதானிருக்கின்றன.
தனுஷ் ஜோடியாக முதல் முறை நடித்துள்ள ‘கொடி’ படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.
அடுத்து ‘மோகினி, சதுரங்க வேட்டை 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே த்ரிஷா, பெங்களூருவில் ஒரு ஹோட்டலை கட்டப் போகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
த்ரிஷாவின் அப்பா சென்னையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் பணியாற்றியவர். அவருக்குச் சொந்தமாக ஹோட்டலை நடத்த வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால், அதற்குள் இறந்துவிட்டார்.
அப்பாவின் கனவை நிறைவேற்ற த்ரிஷா நீண்ட நாட்களாக முயற்சித்து வந்தாராம். அது விரைவில் நிறைவே உள்ளதாகச் சொல்கிறார்கள்.
பெங்களூருவில் த்ரிஷா கட்ட உள்ள ஹோட்டல் 60 அறைகளைக் கொண்ட ஆடம்பரமான சூட்களையும், அறைகளையும் கொண்ட ஹோட்டலாக இருக்குமாம்.
விரைவில் இதுபற்றி அறிவிப்பு வரலாம்.