இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன்பென்ச் பிலிம்ஸ், ‘மேயாத மான், மெர்க்குரி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஒரே சமயத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களைத் தயாரிக்கிறது.
இரண்டு படங்களுமே நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள். ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார்.
அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்குகிறார்.
பிரித்வி சந்திரசேகர் இசையமைக்க. இத்தாலிய ஒளிப்பதிவாளர் ரொபர்டோ ஸஸ்ஸாரா ஒளிப்பதிவு செய்கிறார்.
ஒரு த்ரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து நடைபெற்று அடுத்து ஆண்டு துவக்கத்தில் படத்தை வெளியிட உள்ளார்கள்.