இந்தியக் கடற்படையின் பெருமை சொல்ல வரும் ‘காஸி’

1971ல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே நடந்த போரின் போது, கடலுக்கடியில் நடைபெற்ற ஒரு மிகப் பெரும் யுத்தத்தைப் பற்றிய படம்தான் ‘காஸி’.

‘ப்ளூ ஃபிஷ்’ என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படமானது இந்திய சினிமாவில் இதுவரை எடுக்கப்பட்ட தேசப்பற்று படங்களில் தனித்துவம் பெற்ற படமாக இருக்கும்.

முழுக்க முழுக்க கடலுக்கடியில் நடக்கும் யுத்தத்தினை நவீன தொழில்நுட்பத்துடன் கண்முன் யதார்த்தமாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சங்கல்ப்.

இன்று நடைபெற்ற இப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படத்தின் நாயகன் ராணா டகுபதி, இயக்குனர் சங்கல்ப், படத்தின் இசை அமைப்பாளர் கே, பி.வி.பி யின் நிர்வாக இயக்குனருமான கே.கே ஆகியோர் கலந்து கொண்டு படத்தின் சிறப்புகளைப் பட்டியலிட்டார்கள்.

நாயகன் ராணா டகுபட்டி பேசும் போது,

“என்னுடைய சிறுவயதில் நான் கேள்விபட்ட ‘காஸி’ போர் தான் இப்படத்தின் கதை.

இயக்குனர் சங்கல்ப் முதலில் இதை ஒரு குறும்படமாக இயக்கத் திட்டமிட்டிருந்தார், ஆனால் இப்படம் இப்போது முழுநீளத் திரைப்படமாக வியக்க வைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது.

விசாகப்பட்டிணத்தில் 71 நாட்கள் நடந்த, யாரும் அறிந்திராத, கடலுக்கடியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது இப்படம். போர்களத்தில் நமக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இப்படம் பெருமை சேர்க்கும்.

ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கடியில் வாழும் கடற்படை வீரர்களின் வாழ்க்கையையும், அவர்களின் ஒழுக்கத்தையும் இப்படத்தில் நீங்கள் பார்க்கலாம்,” என்றார்.

இயக்குனர் சங்கல்ப் பேசுகையில்,

“என்னுடைய முதல் படமே ஒரு உண்மை சம்பவத்தைச் சொல்வதில் பெருமை கொள்கிறேன். இப்படத்தை இயக்கியதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளார் கே பேசுகையில்,

“இந்தியத் திரையுலக வரலாற்றில் இப்படம் முற்றிலும் மாறுபட்ட முக்கிய திரைப்படமாக அமையும். முற்றிலும் புதிய களத்தைக் கொண்டது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தனித்தன்மை கொண்ட இப்படம், என் சினிமா வாழ்க்கையில் என்னை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும்,” என்றார்.

‘காஸி’ இந்த வாரம் பிப்ரவரி 17ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Read Previous

2.0 goes to Hollywood

Read Next

குதிரைப் பந்தய பின்னணியில் ‘என்னோடு விளையாடு‘

Most Popular