விஷால், கார்த்தி இணையும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’

பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் ஹாரிஜ் ஜெயராஜ் இசையமைப்பில் விஷால், கார்த்தி, சாயிஷா மற்றும் பலர் நடிக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் பற்றிய அறிவிப்பும் அறிமுகமும் நேற்று நடந்தது.

நடிகர் சங்கத்தில் வெற்றி பெற்று பதவிக்கு வந்த பின் விஷாலும், கார்த்தியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்தனர். அந்தப் படம் மூலம் கணிசமான தொகையை நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்காகத் தரப் போவதாகம் தெரிவித்தனர்.

அந்தப் படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்று சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது.

நேற்று அந்தப் படம் பற்றிய அறிவிப்பையும், அறிமுகத்தையும் விழா ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தனர்.

மறைந்த இயக்குனர் கே.சுபாஷ் எழுதிய கதையை பிரபுதேவா இயக்குகிறார். சுபாஷ் இயக்கத்தில் பிரபுதேவா ‘நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில், 123’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் விஷால், கார்த்தி நாயகர்களாகவும், ‘வனமகன்’ படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் சாயிஷா நாயகியாகவும் நடிக்கப் போகிறார்கள்.

“ கார்த்தி, விஷால் இருவருக்குமே படத்தின் சரிசமமான முக்கியத்துவம் இருக்கும். படத்தில் சாயிஷா மட்டும்தான் கதாநாயகி. அகிம்மை, அன்பு என்ற இரு வெவ்வேறு குணம் கொண்ட நாயகர்களுக்கிடையே நடக்கும் விஷயங்கள்தான் படத்தின் கதை,” என்றார்.

இந்த அறிமுக விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், அஸ்வின், நடிகர் வருண், இயக்குனர் விஜய் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Read Previous

அருண் விஜய் அடுத்த படம் ஆரம்பம்…

Read Next

தமிழிலும் சாதனை படைக்க வரும் ‘சிவலிங்கா’