கன்னடத் திரையுலகில் சில தமிழ் இயக்குனர்கள் இயக்கிய படங்கள்தான் மிகப் பெரிய சாதனைகளைப் படைத்துள்ளன.
அந்த விதத்தில் பி.வாசு இயக்கத்தில் சிவராஜ்குமார், வேதிகா நடித்து 2016ம் ஆண்டு வெளிவந்த படம் ‘சிவலிங்கா’.
மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் கர்நாடகாவில் 80 தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது.
அது மட்டுமல்ல, கன்னடத் திரையுலகில் இதுவரை வெளிவந்து வசூல் சாதனை படைத்த படங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
அந்தப் படம் அதே பெயரில் தமிழில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் நடிக்க தயாரிக்கப்பட்டு இன்னும் சில தினங்களில் ஏப்ரல் 14ம் தேதியன்று வெளியாக உள்ளது.
கன்னடத்தில் படைத்த வசூல் சாதனையை தமிழிலும் இப்படம் படைக்கும் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.