‘அவெஞ்சர்ஸ்’ சீரிசின் கடைசிப் படமான ‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ படம் ஏப்ரல் 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
54 நாடுகளில் வெளியாகியுள்ள ‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ படம் உலகம் முழுவதும் 1.2 பில்லியன் டாலர்களை வசூலித்திருக்கிறதாம்.
1.2 பில்லியன் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7000 கோடி.
‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ படம் வெளியான வார இறுதியில் அமெரிக்கா, கனடாவில் மட்டும் சுமார் 350 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தரவுகளைத் தரும் காம்ஸ்கோர் தெரிவித்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2015ல் வெளிவந்த ‘ஸ்டார் வார்ஸ் – தி போர்ஸ் அவேகன்ஸ்’ வார இறுதி வசூலான 248 மில்லியன் டாலர் தொகையை ‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ எளிதாக முறியடித்துள்ளது.
44 வெளிநாடுகளில் புதிய சாதனையை இந்தப் படம் படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.