ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி வெளிவந்த ‘காஞ்சனா 3’ படம் பத்து நாட்களில் 130 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம் தமிழ்நாட்டில் 60 கோடிக்கு அதிகமாகவும், ஆந்திராவில் 20 கோடிக்கு அதிகமாகவும் வசூலித்துள்ளது.
முந்தைய இரண்டு பாகங்களும் செய்த வசூலை விடவும் இந்த மூன்றாம் பாகத்தில் வசூல் அதிகமாக உள்ளது.
ஹாலிவுட் படமான ‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ படம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவில் பெரிய வசூலைப் பெற்றாலும் அந்தப் படம் ‘காஞ்சனா 3’ படத்திற்குப் போட்டியாக இல்லை. அதனால், ‘காஞ்சனா 3’ வசூல் எந்த விதத்திலும் பாதிப்படையவில்லையாம்.
கடந்த மூன்று நாட்களாக ‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ தியேட்டர்கள் அரங்கு நிறைந்தாலும், ‘காஞ்சனா 3’ படம் ஓடும் தியேட்டர்களும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுவதை தியேட்டர்காரர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம்.