‘காஞ்சனா’ ஹிந்தி ரீமேக்கை இயக்கும் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில் ‘காஞ்சனா 3’ படம் கடந்த வாரம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன் வெளிவந்த ‘காஞ்சனா 2, காஞ்சனா’ ஆகிய படங்களும் வெற்றிப் படங்கள்தான்.

2004ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ‘மாஸ்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ராகவா லாரன்ஸ்.

2007ல் வெளிவந்த ‘முனி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தெலுங்கு, தமிழை அடுத்து ஹிந்தியில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். 2011ல் வெளிவந்த ‘காஞ்சனா’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்ன மூலம் அங்கு இயக்குனராக அறிமுகமாகிறார். ஹிந்தியில் ‘லக்ஷ்மி பாம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க, கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். சரத்குமார் நடித்த திருநங்கை கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு மும்பையில் ஆரம்பமாகி தொடர்ந்து நடந்து வருகிறது.

படத்தை அடுத்த வருடம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Read Previous

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘ராவண கோட்டம்’

Read Next

அவெஞ்சர்ஸ் என்ட்கேம் – 3 நாளில் 7000 கோடி வசூல்