‘தடையறத் தாக்க’ படத்திற்குப் பிறகு அருண் விஜய், இயக்குனர் மகிழ்திருமேனி மீண்டும் இணையும் படம் ‘தடம்’.
ரெதான் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமானது.
அருண் விஜய்யின் அப்பா நடிகர் விஜயகுமார், மாமா இயக்குனர் ஹரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு படத்தைத் துவக்கி வைத்தார்கள்.
‘தில், தூள், ஒஸ்தி’ என பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் படத் தொகுப்பை கவனிக்கிறார்.
யோகி பாபு நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘குற்றம்’ வெற்றிப் படத்திற்குப் பிறகு ரெதான் புரொடக்ஷன்ஸ், அருண் விஜய்யும் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது.