‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிம்புதேவன்.
தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக வராத சரித்திரப் பட பஞ்சத்தை அந்தப் படம் மூலம் தீர்த்து வைத்தார்.
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் 2006ம் ஆண்டு வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தில் வடிவேலு இரு வேடங்களில் நாயகனாக நடித்தார். நகைச்சுவைப் படமான அந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இயக்குனர் சிம்புதேவன் கடைசியாக விஜய் நடித்த ‘புலி’ படத்தை இயக்கினார். 2015ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் தோல்வியைத் தழுவியது.
அதற்கடுத்து அவர் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாகத் தகவல் வெளியானது.
‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ விரைவில் ஆரம்பமாக உள்ளது இயக்குனர் ஷங்கர் கடந்த வாரம் உறுதி செய்தார்.
இயக்குனர் ஷங்கர், லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளார்.
இரண்டாம் பாகத்தில் வடிவேலு 3 வேடங்களில் நடிக்க உள்ளார் என்றும், படத்திற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள இவிபி ஸ்டுடியோவில் மிகப் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாம்.