‘பிக் பாஸ்’, ஓவியாக்கு சிம்பு ஆதரவு, கொட்டிய லைக்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நேற்று ஓவியாவை மற்ற போட்டியாளர்கள் சேர்ந்து அழ வைத்துவிட்டார்கள்.

இது தொடர்பாக நேற்று காலை முதலே ஒளிபரப்பாகி வந்த புரோமோ ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

பல திரைப் பிரபலங்களும் ஓவியாக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டார்கள். அதில் சிம்புவும் ஒருவர்.

சிம்பு அவருடைய டிவீட்டில், “மற்றவர்களிடத்திலிருந்து ஒருவர் வித்தியாசமாக இருந்தால் அவரைத் தனியாக விட வேண்டும். அதை விட்டுவிட்டு அவரை ஓரம் கட்டுவதும், வசை பாடுவதும் கூடாது,” என்று பதிவிட்டார்.

சிம்புவின் இந்தக் கருத்துக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக்ஸ் கொடுத்து அசத்திவிட்டனர்.

விஜய் டிவியின் ஓவியா அழுகை சம்பந்தப்பட்ட புரோமோவிற்குக் கூட இவ்வளவு வரவேற்பு இல்லை. ஆனால், சிம்புவின் பதிவிற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.

Read Previous

‘விஐபி 2’ – ஆகஸ்ட்டில் வெளியீடு

Read Next

தெலுங்கிலும் ரசிகர்களைக் கவர்ந்த சாய் பல்லவி

Most Popular