‘ஸ்பைடர்’ தமிழ் உரிமை விலை என்ன ?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா மற்றும் பலர் நடிக்க, தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் படம் ‘ஸ்பைடர்’.

இப்படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது. சுமார் 35 கோடி கொடுத்து வெளியீட்டு உரிமை வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

‘பாகுபலி 2’ படத்தை 47 கோடி கொடுத்து வாங்கினார்கள். சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் 47 கோடிக்கு வாங்கப்பட்டது. ஆனால், சுமார் 120 கோடி ரூபாய் செலவில் மட்டுமே தயாராகியுள்ள ‘ஸ்பைடர்’ படத்தை 35 கோடிக்கு வாங்கியிருப்பது அதிக விலை என்றே சொல்கிறார்கள்.

செப்டம்பர் மாதம் 27ம் தேதி ‘ஸ்பைடர்’ படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

Read Previous

‘நிபுணன்’ இசை வெளியீடு

Read Next

‘நிபுணன்’ வழக்கமான த்ரில்லர் படம் அல்ல – அர்ஜுன்