‘நிபுணன்’ இசை வெளியீடு

அர்ஜுனின் 150வது படமான ‘நிபுணன்’ வரும் ஜூலை 28 அன்று உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது.

கிரைம் திரில்லர் படமான இந்தப் படத்தில் பிரசன்னா, வரலக்ஷ்மி சரத்குமார், சுருதி ஹரிஹரன் ஆகியோர் அர்ஜூனுடன் சேர்ந்து நடித்துள்ளனர் . டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘நிபுணன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று நடந்தது.

புதுமுக இசையமைப்பாளர் நவீன் இசையில் இப்படத்தின் பாடல்கள் மிக அருமையாக இருப்பதாகவும், மக்களால் பெரிதும் ரசிக்கப்படும் என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர்.

அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம் மற்றும் அருண் வைத்யநாதன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இன்று மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் ஜுக் பாக்ஸை வெளியிடுகிறார்.

Read Previous

மீசைய முறுக்கு விமர்சனம்

Read Next

‘ஸ்பைடர்’ தமிழ் உரிமை விலை என்ன ?

Most Popular