3 புதிய போட்டியாளர்கள், ‘பிக் பாஸ்’ தாக்குப் பிடிப்பாரா ?

விஜய் டிவியில் 50 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் மட்டும் 3 புதியவர்கள் நுழைந்துள்ளார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகை சுஜா வருணி, நேற்று நடிகர் ஹரீஷ் கல்யாண், இன்று நடிகை காஜல்.

காஜல் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதை ‘ஆட்டோவிற்குள் வந்த அடுத்த சூறாவளி’ என்று புரோமோவை இன்று நண்பகல் டிவிட்டரில் வெளியிட்ட விஜய் டிவி, கொஞ்ச நேரத்திற்குள் அந்த புரோமோவை டிவிட்டரிலிருந்து நீக்கிவிட்டது.

திரும்பவும் அந்த புரோமோ ஒளிபரப்பாகுமா ஆகாதா என்பது தெரியவில்லை.

சுஜா வருணி, ஹரீஷ் கல்யாண், காஜல் பசுபதி ஆகியோர் பெரிய பிரபலங்கள் இல்லை. அவர்கள் யாரென்று பலருக்கும் தெரியாது. இப்படி பிரபலம் இல்லாத போட்டியாளர்களால் நிகழ்ச்சியைப் பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடம் குறைய வாய்ப்புள்ளது.

ஓவியா ஒருவர் வெளியேறியதால் ஏற்கெனவே பலர் நிகழ்ச்சியைப் பார்ப்பதை நிறுத்திவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

ஓவியாவும் பிக் பாஸ் வீட்டிற்கு நிச்சயம் திரும்ப வரமாட்டேன், சினிமாவில்தான் நடிக்கப் போகிறேன் என திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

ஓவியா இடத்தை நிரப்ப யார் வந்தாலும் முடியாது, ஓவியாவேதான் வரவேண்டும் என்று ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில், இனி ஓவியாவும் வர மாட்டார் என்பது தெளிவாகிவிட்டது.

3 புதிய போட்டியாளர்கள் நுழைந்தாலும், பிக் பாஸ் வரும் நாட்களில் தாக்குப் பிடிப்பாரா என்பது சந்தேகம்தான்.

இந்த வாரம் முழுவதுமே நிகழ்ச்சி சுவாரசியமாக இல்லாமல் கடந்து போனது. நாளை கமல்ஹாசன் வந்து சொல்வதில்தான் இனிவரும் நாட்களில் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கலாமா வேண்டமா என ரசிகர்கள் முடிவு செய்வார்கள்.

Read Previous

ரசிகர்களுக்கு ஓவியா -வின் வீடியோ வேண்டுகோள்

Read Next

‘மெர்சல் எமோஜி’ வெளியிட்ட டிவிட்டர்

Most Popular