பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஆர்த்தி, ஜுலி

பிக் பாஸ் நிகழ்ச்சி ஓவியா வெளியேறிய பிறகு பரபரப்பு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

சக்தி, காயத்ரி, ரைசா ஆகியோர் வெளியேறிய நிலையில் இன்று பழைய போட்டியாளர்களான ஆர்த்தி, ஜுலி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார்கள்.

நேற்று கமல்ஹாசனுடன் நிகழ்ச்சியை விட்டு கடந்த வாரங்களில் வெளியேறியிருந்த, ஆர்த்தி, ஜுலி, பரணி, சக்தி, காயத்ரி ஆகியோர் வந்து உரையாடினார்கள்.

அப்போது மீண்டும் வீட்டிற்குள் போக யாருக்கு விருப்பம் இருக்கிறது என கமல்ஹாசன் கேட்டார். அப்போது ஆர்த்தி போக விரும்புவதாகச் சொன்னார். ஜுலி மக்கள் சம்மதித்தால் போவேன் என்றார்.

சற்று முன் ஒளிபரப்பான புரோமோவில் ஆர்த்தி, ஜுலி ஆகிய இருவரும் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

ஓவியா வெளியேற முக்கியக் காரணமா இருந்தவர்களில் ஜுலியும் ஒருவர். அது மட்டுமல்லாமல், பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்திலிருந்தே ஆர்த்திக்கும், ஜுலிக்கும் ஆகாது.

ஜுலியை ‘ஃபேக்’ என்ற முதலிலேயே சொன்னவர் ஆர்த்தி மட்டுமே. இன்று அவர்கள் இருவரும் மீண்டும் உள்ளே நுழையும் நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் கொஞ்சம் பரபரப்பு இருக்கலாம்.

Read Previous

‘விவேகம்’ – தமிழ்நாடு, முதல் வார இறுதி வசூல் எவ்வளவு ?

Read Next

‘பிக் பாஸ்’ வீட்டில் ஜுலி, ஆர்த்தி – நேயர்கள் கோபம்

Most Popular