கவர்ச்சியில் இறங்கிய அமலா பால்

‘மைனா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கவனத்தை ஈர்த்தவர் நடிகை அமலா பால். அதன் பின் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து ‘தலைவா’ படத்தில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்தார்.

முன்னணி கதாநாயகியாக இடம் பிடிப்பதற்குள் இயக்குனர் விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டு, சீக்கிரமே விவாகரத்தும் வாங்கிக் கொண்டார்.

பொதுவாக, தமிழ்த் திரையுலகத்தில் திருமணம் ஆன நடிகைகளுக்கு மார்க்கெட் போய்விடும் என்பார்கள். இவருக்கு திருமணமாகி, உடனே விவாகரத்தும் ஆனது. அது அவருடைய திரையுலகப் பயணத்திற்கு வேகத் தடையாக அமைந்தது.

இருந்தாலும் அமலா பால் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன. தனுஷுடன் இணைந்து நடித்த ‘விஐபி 2’ படம் சமீபத்தில் வந்தது. அடுத்து அவருடன் ‘வட சென்னை’ படத்திலும் நடித்து வருகிறார்.

‘திருட்டுப் பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சின்ரெட்டலா, ராட்சசன்’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் தற்போது நாயகியாக நடித்து வருகிறார் அமலா பால்.

இதில் ‘திருட்டுப் பயலே 2’ படத்திற்காக வெளியான போஸ்டர்களில் அமலா பாலின் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. இந்தப் படம் கள்ளக் காதல் சம்பந்தப்பட்ட படம். அதனால், அப்படியிருந்திருக்கலாமோ என்ற எண்ணமும் இருந்தது.

ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவிற்குக் கூட மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து வந்து ஆச்சரியப்படுத்தினார் அமலா பால். தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகையும் ஒரு பொது நிகழ்ச்சிக்கு இந்த அளவிற்கு கவர்ச்சியாக இதுவரை உடை அணிந்து வந்தது கிடையாது.

இந்த கவர்ச்சி உடை விஷயத்தில் மும்பை நடிகைகளையும் அமலா பால் மிஞ்சி விட்டார் என்று விழாவுக்கு வந்தவர்கள் முணுமுணுத்தனர்.

Read Previous

புரியாத புதிர் – விமர்சனம்

Read Next

அனிருத்தைப் பாராட்டிய ராஜமௌலி

Most Popular