‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு மோகன்ராஜா இயக்கி வரும் படம் ‘வேலைக்காரன்’.
அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தை முதலில் செப்டம்பர் மாதம் 27ம் தேதி வெளியிடுவதாக இருந்தார்கள். கடந்த சில நாட்களாக படத்தின் வெளியீடு தீபாவளிக்கு தள்ளிப் போனதாக செய்திகள் வந்தன.
இப்போது படத்தை கிறிஸ்துமஸ் விடுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
செப்டம்பர் 27ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிவடையாததால் படத்தை தீபாவிளிக்கு வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால், தீபாவளியன்று ‘மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்கள் அன்று வெளியாவதால் ‘வேலைக்காரன்’ படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம்.
சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ வெளிவந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. எனவே, ‘வேலைக்காரன்’ படத்தை டிசம்பரில் வெளியிட்டதும், அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தை கோடை விடுமுறையில் வெளியிடலாம் என்றும் தீர்மானித்துள்ளார்களாம்.