விஜய் ஆண்டனி தற்போது ‘அண்ணாதுரை, காளி’ ஆகிய இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
‘அண்ணாதுரை’ படத்தை ஜி. சீனிவாசன் இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, குடிகாரர், ஆசிரியர் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்படத்தை தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற பெயரில் வெளியிடுகிறார்கள். தெலுங்குப் படத்தின் முதல் பார்வையை சிரஞ்சீவி வெளியிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனி நடிக்கும் மற்றொரு படமான ‘காளி’ படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். ‘வணக்கம் சென்னை’ படத்திற்குப் பிறகு கிருத்திகா இயக்கும் இரண்டாவது படம் இது. இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
‘அண்ணாதுரை’ படம் முதலிலும், ‘காளி’ படம் அதற்கடுத்தும் வெளியாக உள்ளது.