முதலிடத்தில் ‘மெர்சல்’ – ஆளப் போறான் தமிழன்….பாடல்

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் இசை இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது.

இப்படத்தின் அனைத்து பாடல்களின் லிரிக் வீடியோக்களும் யு டியுபில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

முதல் சிங்கிளாக இப்படத்தில் இடம் பெற்ற ‘ஆளப் போறான் தமிழன்..’ பாடல் வெளியான நிமிடத்திலிருந்தே சூப்பர் ஹிட் பாடலாகிவிட்டது.

இப் பாடல் யு டியூபில் மட்டும் 1 கோடி பார்வைகளைத் தொட உள்ளது. அது மட்டுமல்லாமல் அனைத்து இசை இணையதளங்களிலும் அதிக முறை கேட்கப்படும் பாடலாக முதலிடத்தில் உள்ளது.

சமீபத்தில் வெளியான பாடல்களில் இந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்ற பாடல் இது மட்டுமே.

Read Previous

‘நீட்’ பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் – கமல்ஹாசன்

Read Next

ஒரே நாளில் 7 தமிழ்ப் படங்கள் ரிலீஸ், இது நியாயமா ?