‘நீட்’ பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் – கமல்ஹாசன்

‘நீட்’ தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை போராடிய ஏழை மாணவி அனிதா, டாக்டருக்குப் படிக்க முடியாத சோகத்தில் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழக மக்களிடம் பெரும் துயரத்தை ஏற்படுத்திய அவரது இழப்பு, கடந்த சில நாட்களாக மாணவர்கள் மத்தியில் ‘நீட்’ தேர்வை எதிர்த்து போராட வைத்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

‘நீட்’ தேர்வு பற்றி விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் எப்போதோ குரல் எழுப்பினார். அனிதா மறைவுக்குப் பிறகு நடந்து வரும் போராட்டம் குறித்தும் தற்போது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

“Neet பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் இது விடை காணும் வேளை. இது நம் சந்ததியின் எதிர்காலம், கூடி யோசிப்போம். வெகுளாதீர், மதி நீதியையும் வெல்லும்.

களம் இறங்கிவிட்டதை உணராத Tamil tweeters அனைவருக்ககும். இதுவும் களமே. பல களம் பொருந்தும் மாமல்லரன்றோ நாம்,” என கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Read Previous

நடிப்பதற்கு கிரிக்கெட் ஆடத் தெரிந்த பெண்கள் தேவை…

Read Next

முதலிடத்தில் ‘மெர்சல்’ – ஆளப் போறான் தமிழன்….பாடல்