நடிப்பதற்கு கிரிக்கெட் ஆடத் தெரிந்த பெண்கள் தேவை…

ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தில் இடம் பெற்ற ‘நெருப்புடா..’ பாடல் மூலம் பிரபலமானவர் அருண்ராஜா காமராஜ்.

பாடலாசிரியராகவும், நடிகராகவும் உள்ள அருண்ராஜா காமராஜ் அடுத்து இயக்குனர் ஆகவும் மாறியிருக்கிறார்.

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்திய சினிமாவில் இதுவரை யாரும் அப்படி ஒரு படத்தை உருவாக்கியதில்லை.

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியவரும், பயிற்சியாளருமான தேவிகா பஃல்ஷிகார் இப்படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமில்லாமல், தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் செய்யத் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.

தேவிகாவின் அறிவிப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக்களிப்பதாகவும், அவரது உதவியை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வதாகவும், இப்படத்தின் தரத்திற்கும் விளம்பரத்திற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும் எனவும் அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார்.

இப்படத்தில் இந்திய பெண்கள் அணியைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் நடிக்க விரும்பினால் தான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகவும் அருண்ராஜா தெரிவித்துள்ளார்.

பெரிய அளவில் இப்படத்திற்கான நடிகைகள் தேர்வு நடத்தப்படவுள்ளது. கிரிக்கெட் ஆடத் தெரிந்த, நன்கு நடிக்கவும் தெரிந்த பெண்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Read Previous

இப்போதைய இசையில் இரைச்சல் அதிகம்தான் – ஏ.ஆர்.ரகுமான்

Read Next

‘நீட்’ பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் – கமல்ஹாசன்

Most Popular